மடகஸ்கார் மற்றும் கொமோரோஸ் நாடுகளின் கடற்படை மற்றும் கடல் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு விஷேட பயிற்சிகளை வழங்க உள்ளதாக இலங்கை கடற்படை கூறியுள்ளது.
ஐக்கிய நாடுகளின் போதைப் பொருள் மற்றும் குற்றங்கள் சம்பந்தமான நிறுவனத்தின் பரிந்துரைப்படி இப்பயிற்சி வழங்கப்பட உள்ளதாக கடற்படை கூறியுள்ளது.
திருகோணமலை மற்றும் மிரிஸ்ஸ கடற்பகுதிகளை மையமாக வைத்து இப்பயிற்சி வழங்கப்பட உள்ளது.
கிழக்கு ஆபிரிக்காவை அண்மித்த கடல் பகுதயை அடிப்படையாக வைத்து இடம்பெறும் போதை மருந்து கடத்தல் மற்றும் கடற்கொள்ளையைத் தடுக்கும் நோக்கில் இப்பயிற்சி வழங்கப்பட உள்ளதாக இலங்கை கடற்படை கூறியுள்ளது.
(அத தெரண தமிழ்)