மடுல்சீமை பகுதியில் 11 வயது சிறுமி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
புடவை ஒன்றை பயன்படுத்தி வீட்டுக்கு அருகில் இருந்த சிறிய மரம் ஒன்றிலேயே இவர் தூக்கிட்டுக் கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சடலம் மெடிகஹதென்ன வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு இன்று பிரேதப் பரிசோதனைகள் இடம்பெறவுள்ளன.
இதேவேளை தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மடுல்சீமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.