Tuesday, October 18, 2016

டியூசன் வகுப்பிற்கு சென்ற 16 வயது சிறுமி கடத்தல் - பொகவந்தலாவையில் சம்பவம்.

மேல­திக வகுப்­புக்­காக சென்ற பொக­வந்­தா­லாவை பொக­வானை தோட்­டத்­தைச்­சேர்ந்த 16 வயது சிறுமி ஆசை­வார்த்தை கூறப்பட்டு முச்­சக்­கர வண்­டியில் கடத்­திச்­செல்­லப்­பட்­டுள்ளார். அக்­கு­ரண பிர­தே­சத்­திற்கு அவர் கடத்­திச்­செல்­லப்­பட்­டி­ருப்­ப­தாக பொக­வந்­த­லாவை பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு பதி­யப்­பட்­டுள்­ளது.
மேற்­படி கடத்தல் சம்­ப­வ­மா­னது நேற்று முன்தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை காலையில் இடம்­பெற்­றுள்­ளது. குறித்த தினத்தில் மேற்­படி சிறுமி மேல­திக வகுப்­புக்­காக செல்­வ­தாக கூறிச்­சென்­றவர் மீண்டும் வீடு­தி­ரும்­பா­த­தை­ய­டுத்து தேடுதல் நடத்­தப்­பட்­டுள்­ளது. எனினும் சிறு­மியை காணக்­கி­டைக்­கா­ததால் பெற்றோர் பொலிஸ் நிலை­யத்தில்  முறைப்­பாடு செய்­துள்­ளனர். சிறு­மியை வெ ளிநாட்­டுக்கு அனுப்பி வைக்கும் நோக்கில் ஆசை வார்த்தை பேசி இவ்­வாறு முச்­சக்­கர வண்­டியில் கடத்தி செல்­லப்­பட்­டி­ருப்­ப­தாக தெரி­ய­வந்­துள்­ள­தென தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. சம்­பவம் தொடர்பில் அக்­கு­ரணை பொலிஸ் நிலை­யத்­திற்கு தகவல் வழங்­கப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் தேடுதல், விசாரணை நடவடிக்கைகளுக்காக பொலிஸ் குழு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித் தனர்.
Disqus Comments