அவுஸ்திரேலிய பிரதான நிலப் பகுதிக்கும் தாஸ்மானியாவுக்கும் இடையிலுள்ள பாஸ் நீரிணைக்கு மேல் 21,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானமொன்றில் பெண்ணொருவர் நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை குழந்தையொன்றைப் பிரசவித்துள்ளார்.
சிறிபா என்ற மேற்படி பெண் அந்த விமானத்தின் அவசர கவனிப்பு பிரிவில் மருத்துவ உத்தியோகத்தரான பீற்றர் ஜேம்ஸின் உதவியுடன் குழந்தையைப் பிரசவித்துள்ளார். பிறந்த குழந்தைக்கு அர்மன்டோ சோனி டே என பெயர் சூட்டப்பட்டுள்ளது.