துருக்கியில் உள்ள Antalya கடற்கரைக்கு சுற்றுலா சென்ற பெண்மணி ஒருவர், Azur Air என்ற விமானத்தின் மூலம் துருக்கியில் இருந்து மாஸ்கோ நோக்கி சென்றுகொண்டிருந்தார்.
நீரிழிவு நோயாளியான இவர் இன்சுலின் மருந்தினை எடுத்துவர மறந்துவிட்டார். இந்நிலையில் விமானத்தில் வைத்து இவருக்கு திடீரென மூச்சடைப்பு ஏற்பட்டுள்ளது.
விமான ஊழியர்கள் இவருக்கு மருத்துவ உதவி அளித்தபோதும், சிகிச்சை பலனின்றி இவர் இறந்துவிட்டார்.
இதனைத்தொடர்ந்து விமான ஊழியர்கள், இவரது உடலை கட்டி பயணிகள் அமரும் சீட்டின் நடைபாதைக்கு இடையில் வைத்துள்ளனர்.
இதனைப்பார்த்த சகபயணி ஒருவர், ஒரு பிணத்தின் அருகில் என்னால் எவ்வாறு உட்கார இயலும் என கூறி அங்கிருந்து இடம் மாறியுள்ளார்.
அதன்பின்னர், உடனடி உதவி கருதி விமானம் வேமாக மாஸ்கோவில் தரையிறக்கப்பட்டது.