கற்பிட்டி பிரதேசத்தில் அண்மையில் இரு குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலுடன் தொடர்புடைய பௌத்த மதகுரு ஒருவர் உட்பட 25 பேரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 3ஆம் திகதி இவர்களை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கற்பிட்டி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த கலவரத்துடன் தொடர்புடையவர்களை அடையாளம் காணும் வகையிலான மேலதிக விசாரணைகள் தற்போது ஆரம்பக்கப்பட்டுள்ளதாக கற்பிட்டி காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
