புத்தளம் பிராந்தியத்தில் 5 கோடியே 60 லட்சம் தொன் நிறையுடைய கரும்பொன்ம வளம் உள்ளதாக அவுஸ்திரேலிய நிறுவனம் ஒன்று கண்டறிந்துள்ளது.
கரும்பொன்ம கனியவளத்தை கொண்டு 20 வருட காலத்திற்கு சுரங்கங்களை இயக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புத்தளம் மாவட்டத்தில் ஆறு கனியவள சுரங்கங்களை இயக்குவதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய நிறுவனத்தின் முகாமையாளர் ரொபேட் எம். டெய்லர் தெரிவித்துள்ளார்.
கரும்பொன்ம கனியவ சுரங்கங்களை அபிவிருத்தி செய்வதற்காக இலங்கை முதலீட்டு சபை உட்பட பல அமைச்சுக்களுடனும் ஏற்கனவே பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பேச்சுவார்த்தைகள் ஆரம்ப நிலையில் உள்ளதன் காரணமாக இந்த திட்டம் குறித்து ஒப்பந்தம் எதுவும் கைச்சாத்திடப்படவில்லை.