Monday, October 31, 2016

சிவனொளி பாத மலையை முஸ்லிம்களுக்கு விட்டுக் கொடுக்க மாட்டோம்! குருநாகல் பிக்குகள் ஆா்ப்பாட்டம்.

எத்தகைய நிலை ஏற்பட்டாலும் சிவனொளிபாத மலையை விட்டுக்கொடுக்கப் போவதில்லை, சிங்களவர்களுக்கே சொந்தமான சிவனொளிபாத மலையை முஸ்லிம்களுக்கு விட்டுக்கொடுக்க ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்.
அதனால் சிவனொளிபாத மலையினை எவரும் சொந்தம் கொண்டாட நினைக்க வேண்டாம் என குருநாகல பகுதி பிக்குகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சிவனொளிபாத மலையை மீட்டு எடுக்க வேண்டும் என்று குருநாகல பிக்குகள் தலைமையில் குருநாகல சிங்கள இளைஞர் அமைப்பு மற்றும் இராணுவ பாதுகாப்பு அமைப்பு போன்றன ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை நேற்று (30-10-2016) முன்னெடுத்தனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தின் போதே அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.
மேலும் அடுத்த வாரம் கண்டியில் எமது ஆர்ப்பாட்டம் நடைபெறும் சிவனொளிபாத மலையை மீட்டெடுக்கும் வரை நாம் ஓயப்போவது இல்லை.
எங்களுக்கு கடந்த ஆட்சியாளர்கள், தற்போது ஆண்டுகொண்டிருப்பவர்கள் நாளை ஆளப்போகின்றவர்கள் அனைவரும் ஒன்றே. சிங்களவர்களின் உரிமையில் கைவைத்தால் உயிரை நீத்தாவது நாம் அதனை காத்துக்கொள்வோம் எனவும் பிக்குகள் குறிப்பிட்டனர்.
தற்போது நடைபெறுபவை நிறுத்தப்பட வேண்டும் அல்லது ரணிலோடு சேர்ந்து ஆட்சியை எடுத்துக்கொண்டு வீட்டுக்கே சென்று விடுங்கள். எமது உரிமையில் கைவைக்கும் யாராக இருந்தாலும் அவர்களை விடமாட்டோம் எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பிக்குகளின் கடுமையாக எச்சரிக்கையினையும் விடுத்தமை குறிப்பிடத்தக்கது.
Disqus Comments