கட்டார்
பொது மன்னிப்பு காலம் முடிவடைந்த பின்னா் தீவிரமான பரிசோதனைகள் இடம்பெறும் என கட்டார்
செய்திகள் தெரிவிக்கின்றன. பொது மன்னிப்புக் காலம் வழங்கப்பட்டும் அதனைப் பயன்படுத்தாமல் கட்டாரில்
சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவா்களை இலக்கு வைத்தே மேற்படி தீவிர சோதனை வேட்டை
நடாத்தப்பட இருக்கின்றது. மேற்படி காலத்தைப் பயன்படுத்தி தங்களது நாடுகளுக்கு சொல்லாதவா்களுக்கு
எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட இருக்கின்றது.
பெரும்
தொகையான மக்கள் மேற்படி பொது மன்னிப்பின் கீழ் தங்களது நாடுகளுக்கு செல்ல விண்ணப்பித்துள்ளார்கள்.
மன்னிப்புக் காலம் முடிவடை இன்னும் சிறது காலமே எஞ்சியுள்ள நிலையில், பயன்படுத்தாதவா்களுக்கு
எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட இருக்கின்றது.
பொதுமன்னிப்பு
காலத்தை அதிகப்படுத்துவதற்கான எந்த வித திட்டங்களும் இல்லை என்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே திட்டமிட்டபடி எதிர்வரும் டிசம்பா் 1ம் திகதி முடிவடைய இருக்கின்றது.
பொதுமன்னிப்பின்
கீழ் தாயகம் செல்ல விரும்புவா்கள் திகதி குறிப்பிடப்படாத விமான டிக்கட்டுடன்
(OPEN TICKET) வரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டு இருந்தனா். அப்படி டிக்கட்டைக் பெற்றுக்
கொள்ள பண வசதி இல்லாதவா்கள், யாரும் இருந்தால்
மனிதபிமான அடிப்படையில் சில நேரம் செய்து கொடுக்கப்படலாம் என்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்ட
விரோதமாக கட்டாரில் தங்கி இருப்பவா்கள், எந்த விட சட்டரீதியான சிக்கல்களும் இல்லாமல்
தங்களது நாட்டுக்குச் சொல்ல இது ஒரு வரப் பிரசாதமாகும். மேற்படி பொதுமன்னிப்பு தொடா்பான
அறிவிப்பை உள்துறை மக்கள் தொடர்புத்துறை அமைச்சு
(Ministry of Interior’s Public Relations Department) அரபிக், ஆங்கிலம், தமிழ், நேபாளம்,
உறுது மற்றும் ஹிந்தி, உட்பட 11 மொழிகளில் வெளியிட்டு இருந்தது. அதுமட்டுமல்லமல் செய்தித்தாள்கள்,
மற்றும் அந்தந்த நாட்டில் துதரகங்கள் மூலமாகவும், பொது மன்னிப்பு தொடா்பான அறிவித்தல்கள்
வழங்கப்பட்டன.
மேற்படி
பொது மன்னிப்பின் கீழ் அதிகளவான இந்தியா, நேபாளம், பங்களாதேசஷ் போன்ற நாடுகளைச் சோ்ந்த
தொழிலாளா்கள் தாயகம் சென்றுள்ளதோடு இன்னும் தாயகம் செல்ல விண்ணப்பித்தும் இருக்கின்றார்கள்.
பொதுமன்னிப்பு
காலம் முடிந்த பின்னா், எந்த ஒரு தொழில் வழங்குனரும், உத்தியோக பூா்வ வீஸா இல்லாமல்
தொழிலாளா்களை வேலைக்கு அமா்த்தி இருந்தால் 3 வருடம் சிறைத்தண்டனை அல்லது 50000 றியால்கள்
தண்டமும் விதிக்கப்படும். சிலநேரம் மேற்படி இரண்டு தண்டனைகளும் ஒரு நேரத்தில் வழங்கப்படலாம்.