Monday, October 31, 2016

மத்திய கிழக்கிற்கு பணியாளா்களாக செல்பவா்களுக்கான நல்லசெய்தி - நிதியமைச்சா்


மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் பணியாளர்களுக்கான வேதனத்தை உயர்த்துமாறு இலங்கை கோரவுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் மத்திய கிழக்குக்கு செல்லும் பணியாளர்களின் வேதனத்தை 300 டொலர்களாக உயர்த்தக்கோரவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் விவசாய உற்பத்திகளின் இறக்குமதி அதிகரித்துள்ளன.

உள்நாட்டு கைத்தொழில் பொருட்கள் மற்றும் வீட்டு நிர்மாணங்களுக்கான செலவுகள் உயர்ந்துள்ளன.

இதன்காரணமாகவே மத்திய கிழக்கு செல்லும் பணியாளர்களின் வேதனத்தை உயர்த்தக்கோருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Disqus Comments