பாடசாலை மாணவர்களின் சீருடைக்காக வழங்கப்படும் பண வவுச்சர்களை பாடசாலைகளுக்கு விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பமாகவுள்ளன.
வலய கல்விப் பணிப்பாளர்களின் மூலம் சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபர்களுக்கு மாணவர்களின் சீருடைக்கான பண வவுச்சர்கள் அனுப்பி வைக்கப்படவிருப்பதாக கல்வி ராஜாங்க அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவவித்தான தெரிவித்தார்.
பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு புதிதாக சேர்த்துக் கொள்ளப்படும் மாணவர்களுக்கு பண வவுச்சர் அவர்கள் பாடசாலைக்கு சேர்த்துக் கொள்ளப்பட்ட பின்னரே வழங்கப்படும் என்றும் செயலாளர் குறிப்பிட்டார்.
கடந்த வருடத்தில் இடம்பெற்ற குறைபாடுகளை களைத்து இம்முறை முறையான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த பண வவுச்சர் மிகவும் பாதுகாப்பானது. இலகுவாக மாணவர்களுக்கு விநியோகிக்கக் கூடிய வகையில் இவை தயாரிக்கப்பட்டுள்ளன. நான்கு இலட்சம் மாணவர்களுக்கு தேiவாயன பண வவுச்சர்கள் நாளை முதல் விநியோகிக்கப்படும். அடுத்த வருடம் தரம் ஒன்றில் சேர்த்துக் கொள்ளப்படும் மாணவர்களுக்கு பாடசாலை சீருடை பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. மாணவர்களுக்கு சேட்டுக்காகவும் காற்சட்டைக்காகவும் இம்முறை தனித்தனியே வவுச்சர்கள் வழங்கப்படுவதாகவம் செயலாளர் திஸ்ஸ ஹேவவித்தான மேலும் கூறினார்.