Friday, October 21, 2016

சமாதானம் பேசச் சென்ற கற்பிட்டி பள்ளவாசல் தலைவா் வெட்டுக் காயங்களுடன் வைத்தியசாலையில்

 கண்டக்குளியைச் சோ்ந்த மீனவா்களால் நேற்றைய தினத்திலிருந்து, குறிஞ்சிப்பிட்டி மீனவா்களால் புத்தளம் -கல்பிட்டி பிரதான ஆா்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றது. மேற்படி பாதை மறியல் போராட்டத்தினால் அரச மற்றும் தனியார் போக்குவரத்து உட்பட அனைத்து போக்குவரத்துகளும் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் கற்பிட்டி பகுதியைச் சோ்ந்தவா்கள் மிகுந்த சிரமங்களை  சந்தித்து வருகின்றனா். 

பாலாவி கற்பிட்டி பாதை தடைசெய்யப்பட்டுள்ளதால் கல்பிட்டி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை விளக்கி சமாதானம் பேச சென்ற பெறியபள்ளி தலைவர் சாஜஹானை கீழ்தரமாக பேசி கடுமையாக தாக்கி அவருடைய மோட்டார் சைக்கிளும் பொலிஸார் முன்னிலையில்
எரியூட்டப்பட்டுள்ளது தற்போது தலைவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருந்தாலும் நிலைமைகள் இப்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கக் கூடிய தகவல்கள் தெரிவிக்கின்றன. 
Disqus Comments