சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ஒரு தொகை சீனத் தயாரிப்பு சிகரட்டுக்களுடன் சீனப் பெண்ணொருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை சீனாவிலிருந்த வந்த குறித்த பெண்ணை விமான நிலைய சுங்கப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இதன்போது குறித்த பெண்ணிடமிருந்து 470 சிகரெட் பெட்டிகள் சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட சிகரட்டுக்களின் பெறுமதி 56 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
