கடந்த 15ம் திகதி நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இலங்கையில் மின் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் சுமார் 900 மெகாவோட் மின்சாரம் இலங்கை மின் கட்டமைப்பில் இருந்து குறைவடைந்துள்ளதாக இலங்கை மின்சாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.
எதுஎவ்வாறு இருப்பினும் ஏனைய மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து, உயரிய அளவு மின்சாரம் பெறப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும் தற்போது மின்சாரத்துக்கு நிலவும் அதிக கேள்வி காரணமாக நாட்டில் மின் விநியோகத்தை மட்டுப்படுத்த தீர்மானித்துள்ளதாகவும் இலங்கை மின்சார சபை கூறியுள்ளது.
இதற்கமைய இன்றில் இருந்து (17) எதிர்வரும் 21ம் திகதி வரை காலை இரண்டரை மணித்தியாலங்களும் இரவு ஒரு மணித்தியாலமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதேவேளை கொழும்பு நகர் பகுதிகள், வைத்தியசாலைகள், தொழில் வலையங்கள் ஆகியன இதனால் பாதிக்கப்படாது எனவும் கூறப்பட்டுள்ளது.
இதன்படி மின்வெட்டு அமுல்படுத்தப்படும் விதம் பின்வருமாறு,
பகல் பொழுது
பிரிவு - A
08.00 - 10.30 வரை
பிரிவு - B
10.00 - 13.00 வரை
பிரிவு - C
13.00 - 15.00 வரை
பிரிவு - D
15.30-18.00 வரை
இரவு வேளை
பிரிவு - A
18.00 - 09.00 வரை
பிரிவு - B
19.00 - 20.00 வரை
பிரிவு - C
20.00- 21.00 வரை
பிரிவு - D
21.00 - 22.00 வரை
இதன்படி நாடளாவிய ரீதியில் மின் வெட்டு அமுல்படுத்தப்படும் விபரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.














