Monday, October 17, 2016

மணப்பெண் பெண் தப்பியோட்டம் – குடும்பத்தார் தற்கொலை கேரளாவில் சோகச் சம்பவம்.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் வெள்ளனூரை சேர்ந்தவர் சச்சிதானந்தம் (வயது 50) வியாபாரி. இவரது மனைவி சுஜாதா (42). இவர்களது 2-வது மகள் லட்சுமி (23). இன்று காலை திருப்பணித்துறை ரயில்வே தண்டவாளம் அருகே 3 பேரும் நின்றனர்.

அப்போது திருவனந்தபுரம் கொச்சுவேலியில் இருந்து அசாம் மாநிலம் கவுஹாத்திக்கு செல்ல கொச்சுவேலி எக்ஸ்பிரஸ் கோவை நோக்கி வந்தது. திடீரென 3 பேரும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.

3 பேரின் உடல்களும் சில அடிதூரம் இழுத்துச் சென்றது. அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர்.

அப்போது 3 பேரின் உடல் பாகங்கள் துண்டு துண்டாக சிதறி கிடந்தது. இது குறித்து திருப்பணித்துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்து தற்கொலை செய்து கொண்ட சச்சிதானந்தத்தின் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவரது மூத்த மகள் ஜோதிலட்சுமிக்கு கடந்த மாதம் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. அதன்பின்னர் ஜோதிலட்சுமி திடீரென மாயமானார். அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

திருமணம் நிச்சயம் செய்த பின்னர் வேறு வாலிபருடன் ஓட்டம் பிடித்து காதல் திருமணம் செய்திருக்கலாம் என்று தெரியவந்தது. இதனால் அக்கம் பக்கத்தினர் சச்சிதானந்தம் குடும்பத்தை பற்றி கேவலமாக பேசினர். அவமானம் அடைந்த சச்சிதானந்தம் தனது மனைவி, மகளுடன் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

உடல் பாகங்களை சேகரித்த பொலிசார் பிரேத பரிசோதனைக்காக திருச்சூர் அரசு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Disqus Comments