Sunday, October 9, 2016

விருதோடை தும்பு உற்பத்தியாளா்கள் – அமைச்சா் றிஷாத் பத்தியுத்தீன் சந்திப்பு


(முஹம்மத் முஹ்சி) மதுரங்குளி விருதோடைப் பிரதேசத்தில் தும்புத் தொழில் செய்கையாளர்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் ரிஷாத் பதியுத்தீனின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனா். 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயா்பீட உறுப்பினரும், முன்னால் வடமேல் மாகாண சபை உறுப்பினருமான ஆப்தீன் எஹியா அவா்களது வீட்டில் இன்று நன்பகல் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே மேற்படி தும்பு உற்பத்தியாளா்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடா்பாக கைத்தொழில், வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் அவா்களிடம் முறையிட்டுள்ளனா். 

தும்புத் உற்பத்தியாளா்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீா்வைப் பெற்றுக் கொடுக்க உரிய தரப்பாருடன் பேச்சு நடத்துவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கக் கூடிய செய்திகள் தெரிவிக்கின்றன. 

அத்துடன் உரிய விலை கிடைக்காமல் இருப்பதால் தொழிலில் பாதிப்பு ஏற்படுவதாகவும், சீனா போன்ற நாட்டு இடைத் தரகர்கள் விலை நிர்ணயிப்பில் அதிக செல்வாக்கு செலுத்துவதாகவும் இதன் போது சுட்டிக்காட்டப்பட்டது. இப்பிரதேசத்தில் தும்புத் தொழிலில் ஈடுபடுவோர் அதிகளவில் உள்ளதுடன் ஆயிரக் கணக்கானோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் நன்மையடைந்து வருகின்றனா். 

மேற்படி கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினா் நவவி அவா்களும், விருதோடை தும்புச் சங்க உறுப்பினா்களும், மற்றும் ஊா் முக்கியஸ்தா்களும், கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


Disqus Comments