ஒமான் மஸ்கட் Ain Garziz பகுதியில் நீர்நிலை ஒன்றில் தவறி விழுந்து இரு இலங்கை மாணவிகள் உயிரிழந்துள்ளதாக டைம்ஸ் ஒமான் செய்தி வெளியிட்டுள்ளது.
ஒமான் சலாலாவில் இரு வெவ்வேறு தனியார் கல்வி நிலையங்களில் கல்வி பயின்று வந்த செய்னப் மற்றும் ருவனி தில்சாரா சமரவீர ஆகிய இரு மாணவியரும் பாறையொன்றின் மேல் ஷெல்பி எடுக்க முற்பட்ட போது வழுக்கி விழுந்ததுள்ளதாகவும் நீண்ட போராட்டத்தின் பின் ஆழமான நீர்த்
தேக்கப்பகுதியிலிருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்ட போதிலும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டதாகவும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று சனி இரு குடும்பங்களும் அப்பகுதிக்கு சுற்றுலா சென்ற வேளையிலேயே மாலை 6 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
(Madawala News)