Saturday, October 22, 2016

இலங்கைக்கு கடத்தப்பட இருந்த பெருந்தொகையான போதை மாத்திரைகள் பறிமுதல்


இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வேதாளை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக முருகன், கோபால், மனோஜ் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் கூறுகின்றன. 

இந்த சம்பவம் பற்றி இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளின் படி, 

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்துள்ள வேதாளை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு போதை மாத்திரை கடத்தப்படுவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

தகவல் கிடைத்த உடன் பொலிசார், வேதாளை கடற்கரையில் ரோந்து பணியில் ஈடுபடும்போது, வேதாளை கடற்கரைக்கு வந்த கார் ஒன்றை சோதனை செய்யும் போது, அந்த காரில் இருந்து 3 பேர் தப்பியோடியுள்ளார்கள். 

பின்னர் தப்பியோடிய 3 பேரையும் பொலிசார் கைது செய்து போதை மாத்திரைககளை பறிமுதல் செய்துள்ளனர். 

பறிமுதல் செய்யப்பட்ட போதை மாத்திரையை மண்டபம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து சோதனை செய்யும் போது, அவை இலங்கைக்கு கடத்தப்ப இருந்தமை தெரியவந்ததுள்ளது. 

பறிமுதல் செய்யப்பட்ட போதை மாத்திரைகளின் சர்வதேச மதிப்பு 1 கோடி (இந்திய ரூபா) இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மாத்திரைகள் போதைக்காகவும், வலிக்காகவும் பயன்படுத்துவதாக அதிகாரிகள் மேலும் தெரிவிக்கின்றனர். 

அந்த நாட்டு பொலிசார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர். 
Disqus Comments