(கட்டாரில் இருந்து தெளபீக்,யாசிர்-) கட்டார் நாட்டின் முஅய்தர் (மைதர்) பிரதேசத்தில் உள்ள குப்பை தொட்டி ஒன்றினுள் மட்டைப் பெட்டியினுள் வைக்கப்பட்டு பொலித்தீன் பையினால் கட்டப்பட்டு வீசப்பட்ட நிலையில் ஆண் குழந்தை ஒன்று நேற்று முன்தினம் (01.10.2016) அதிகாலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
சுபஹு தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு சென்ற ஏறாவூரைச் சேர்ந்த சகோதரர் ஒருவர் குப்பை தொட்டியினுள் இருந்து குழந்தை அழுவதைப் போன்ற ஓசையை கேட்டதும் அங்கு சென்று பார்த்த போது குப்பையோடு குப்பையாக கட்டப்பட்டு பிறந்த உடன் தொப்புள் கொடி கூட அகற்றப்படாத
நிலையில் வீசப்பட்ட ஆண் குழந்தை ஒன்றை கண்டதை தொடர்ந்து உடனடியாக பொலிசாருக்கு தெரியப்படுத்தினார்.
உடனடியாக வைத்திய குழுவினர் சகிதம் குழந்தையை மீட்டெடுத்த பொலிசார் சிகிச்சை மற்றும் பராமரிப்பின் பொருட்டு வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளதுடன் விசாரணைகளையம் ஆரம்பித்துள்ளனர்.