கற்பிட்டி, கந்தக்குளி பிரதேசத்தில் மீனவர்கள் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள மோதல் சம்பத்திற்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர கூறினார்.
நேற்று மாலை குறித்த மீனவர்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இந்த தீர்மானம் ஏற்பட்டதாக அவர் கூறுகின்றார்.
எவ்வாறாயினும் அமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை சாதகமாக அமையவில்லை என்று மீனவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
ஏற்பட்டுள்ள முறுகல் நிலைக்கு உடனடி தீர்வு பெற்றுத் தர வேண்டும் என்று சிலாபம் மீனவர்கள் சங்கத்தின் தலைவர் ரொஷான் பெர்ணாந்தோ கூறுகின்றார்.
கற்பிட்டி, கந்தக்குளி பிரதேசத்தில் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களுடன் பிரதேசத்தில் உள்ள மற்றொரு மீனவர்கள் குழுவினர் மோதிக்கொண்டதில் அப்பிரதேசத்தில் நேற்று அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.
இதன் காரணமாக 06 மீனவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
