கற்பிட்டி
பொலிஸ் பிரிவில் OIC யாக பணியாற்றிய மன்ஜுல உடுமலகல
புத்தளம்
பொலிஸ் நிலையத்துக்கு உடனடியாக இடம் மாற்றப்பட்டுள்ளார். மேற்படி
இடமாற்றம் பொலிஸ் மா அதிபா் பூஜித
ஜெயசுந்தர அவா்களது அறிவுறுத்தலின்பேரில் புத்தளம் DIG சம்பிக்க சரிவா்தன அவா்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த
இரண்டு நாட்களாக இடம்பெற்று வந்த சாலை மறிப்பு போராட்டம் நேற்று கைகலப்பு
சம்பவமாக மாறியது. மேற்படி கைகலப்பில் 6 போ் வரை காயங்களால் வைத்தியசாலையில்
அனுமதிகப்பட்டுள்ளதோடு
வாகனங்கள் மற்றும் மோட்டார்சைக்கிள்கள் போன்றவை தீக்கிரையாக்கப்பட்டன.
மேற்படி
பிரச்சினையின் போது நிலைமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு காத்திரமான நடவடிக்கைகளை போலிஸார் மேற்கொள்ளாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தமையினால் மேற்படி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
