Monday, October 10, 2016

ஊடகங்களை ஒழுங்குபடுத்துகின்ற முறையொன்றிற்கான காலத்தின் தேவை

சில தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் ஊடக தர்மத்தை பின்பற்றுவதில்லை என்று அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் கலாநிதி ரங்க கலன்சூரிய தெரிவித்துள்ளார்.
 
இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொள்ளும் காட்சிகளை உள்ளடக்கிய செய்திகளை தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் ஒளிபரப்பி வந்தன. இந்த சம்பவத்தில் குறிப்பிட்ட இளைஞர் தற்கொலை செய்துக்கொள்ளுவதற்காக  சம்வ இடத்திற்குச்சென்றது முதல் சடலம் அகற்றப்படும் வரையிலான காட்சிகள் வெளியிடபட்பட்டன. அனர்த்தங்கள் தொடர்பான சம்பவங்களை ஊடகங்களில் வெளிப்படுத்தும் பொழுது அதன் காட்சிகள் தொடர்பில் ஊடக நிறுவனங்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார். 
 
அகோர சம்பவங்கள் தொடர்பில் செய்திகளை வெளியிடும் பொழுது ஊடக விழுமியங்களை தொலைக்காட்சி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும். 
 
சர்வதேச ஊடகங்கள் இத்தகைய அனர்த்தங்கள் தொடர்பான சம்பவங்களை காண்பிப்பதற்கு விசேட தொழில்நுட்பங்களை பயன்படுத்துக்கின்றன. ஏற்றுக்கொள்ளப்பட்ட  அதேவேளை ஊடக விழுமியங்களுக்கு ஏற்ற வகையில், தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
ஊடக தர்மத்தை பின்பற்றாத காரணத்தினாலேயே ஒலி ஒளிபரப்பு ஊடகங்கள் தொடர்பில் சுயாதீன ஒழுங்குபடுத்தல் முறையொன்று ஏற்படுத்தப்படுவதன் தேவை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். 
 
இவ்வாறான செய்திகள் சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு பாதிப்பை ஏற்படுத்துவது மாத்திரமின்றி காட்சிகளை பார்க்கும் சிறுவர்களுக்கும் ஏற்படும் பாதிப்பு பாரியதாகும். இது  ஊடக தர்மத்திற்கு பாதகமானது. தற்கொலைச் சம்பவங்களை வெளியிடும் போது நடைமுறையிலுள்ளள சட்ட விதிகளை கவனத்திற் கொள்ள வேண்டும்.
 
ஊடகங்களுக்கு ஊடக தர்மத்தை நினைவு படுத்துவது அரச தகவல் திணைக்களத்தின் பணியல்ல. இருப்பினும் இத்துறையில் கவனம் செலுத்தும் போது இதனை நினைவூட்டுவதற்கான காலம் ஏற்பட்டிருப்பதாகவே தோன்றுகின்றது  என்று திரு.ரங்க கலன்சூரிய மேலும் தெரிவித்தார். 
Disqus Comments