Thursday, November 17, 2016

துபாயில் டிசம்பா் 1ம், 2ம் மற்றும் 3ம் திகதிகள் பொதுவிடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டன.


துபாயில் எதிர்வரும் நவம்பர் 30-ஆம் தேதி நாட்டுக்காக உயிர்நீத்த வீரர்களின் நினைவு தினமும் டிசம்பர் 2-ஆம் தேதி தேசிய தினமும் வருவதையொட்டி அரசுத்துறை ஊழியர்களுக்கான விடுமுறை தினங்களை அறிவித்துள்ளனர்.


சென்ற வருடத்தில் விடுமுறை தினம் மாற்றி அமைக்கப்பட்டது போலவே இந்த வருடமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதாவது நவம்பர் 30 ஆம் தேதிக்கு பதிலாக டிசம்பர் 1 ஆம் தேதி விடுமுறை விடப்படுகிறது. இதன் மூலம் டிசம்பர் 1 முதல் 3 வரை 3 தினங்கள் தொடர் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 4 ஆம் தேதி ஞாயிறு முதல் அரசு அலுவலகங்கள் இயங்கும்.

அதேபோல் தனியார் துறை ஊழியர்களுக்கு டிசம்பர் 1 மற்றும் 2 தேதி ஆகிய 2 நாட்கள் பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன என்றாலும் ஏற்கனவே சனிக்கிழமை விடுமுறையை அனுபவித்து வருபவர்களுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும்.

Source: Gulf News
தமிழில்(thanks): நம்ம ஊரான்

அதிரை நியூஸ்
Disqus Comments