Thursday, November 17, 2016

அவதானம்... iPhone 7 வெடித்துச் சிதறியதில் தீக்காயமடைந்த பெண்! அவுஸ்திரேலியாவில் சம்பவம்.

iPhone 7 வெடித்துச் சிதறியதில் அவுஸ்திரேலியாவில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி சிட்னி மோர்னிங் ஹெரால்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. சிட்னியைச் சேர்ந்த மெலனி டான் பெலேஸ் எனும் பெண்ணே காயமடைந்துள்ளார்.

இவர் தனது முகநூல் பக்கத்தில் இந்த சம்பவம் தொடர்பில் தெரிவித்துள்ளார். இவர் புதிதாக வாங்கிய, அப்பிள் நிறுவனத்தின் iPhone 7 ஐ சார்ஜ் செய்தபடியே அசதியில்
கண்ணயர்ந்து தூங்கி விட்டார்.

திடீரென மூச்சுத்திணறல், வலி ஏற்பட்டதை உணர்ந்த அவர் திடுக்கிட்டு எழுந்துள்ளார்.

பக்கத்திலிருந்த iPhone வெடித்துச் சிதறி அவரது கை முழுவதும் வெந்து போயிருந்தது அப்போதுதான் அவருக்குத் தெரியவந்தது. இதையடுத்து, மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுத் திரும்பியுள்ளார்.

இனிமேல் யாரும் செல்பேசியை சார்ஜ் செய்தபடியே படுக்கையில் வைத்து உறங்கிவிட வேண்டாம் என தனது முகநூல் பக்கத்தில் அறிவுரை வழங்கியுள்ளார்.
Disqus Comments