வடக்கு, கிழக்கில் அமைந்திருக்கின்ற 100 விகாரைகளை மீள் புனரமைத்து அவற்றுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது. இது தொடர்பாக புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ கொண்டு வந்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக இணை அமைச்சரவைப் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.