வடமேல் மாகாண அரச கலை விழா - 2016 ஒளிப்படப் போட்டியில் வர்ணம் மற்றும் கருப்பு-வெள்ளை பிரிவுகளில் புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு கலைஞர்கள் வெற்றிபெற்றனர்.
இன்று (நவம்பர் 15) வடமேல் மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவின்னோது வர்ணம் மற்றும் கருப்பு-வெள்ளை இரண்டு பிரிவுகளிலும் இரண்டாம் இடம் பெற்ற ஹஸ்னி அஹ்மதும் வர்ண பிரிவில் மூன்றாம் இடம்பெற்ற எம்.என்.எம். பர்ஹானும் பெற்றுக்கொண்டனர்.
வடமேல் மாகாண சபையின் அமைச்சர்களின் தலைமையில் நடைபெற்ற இப் பரிசளிப்பு விழாவில் வெற்றியாளர்களுக்கு சான்றிதழும் பண (காசோலை)ப் பரிசும் வழங்கப்பட்டன.
புத்தளம் பிரதேசத்தில் சமூக மற்றும் கல்விசார் நடவடிக்கைகளில் இவ் இருவரின் பங்களிப்பையும் ஒத்துழைப்பையும் The Puttalam Times சமூக ஊடகம் நன்றியுடன் நினைவுகூறுகின்றது.
ஹஸ்னி அஹ்மத், எம்.என்.எம். பர்ஹான் இருவரும் தேசிய சர்வதேசிய மட்ட போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என கலையார்வமுள்ள அனைவர் சார்பில் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்: ஹிஷாம் ஹுஸைன், புத்தளம்


