Wednesday, November 16, 2016

SLTJ அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துல் ராசிக் சற்று முன்னர் கைது.

அகில இலங்கை தவ்ஹீத் ஜம்ஆத் (SLTJ) அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துல் ராசிக் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த நபரிடம் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக இன்றைய தினம் பொலிஸில் ஆஜராகுமாறு அழைப்பாணை நேற்றைய தினம் அனுப்பப்பட்டது.
சமூக ஊடகங்களின் ஊடாக இனவாதத்தை தூண்டும் நடவடிக்கைகளில் குறித்த நபர் ஈடுபட்டு வருவதாகவும், புத்த சாசனத்தை அவமானப் படுத்துவதாகவும் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாட்டை அடுத்தே அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
அதற்கமைய இன்றைய தினம் மாளிகாவத்தை பொலிஸில் ஆஜராகியபோது அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டுள்ள அப்துல் ராசிக்கை இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர் படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. (ஸ)
Disqus Comments