எல்லை நிர்ணய செயற்பாடுகள் நிறைவடைந்துள்ள மாவட்டங்களில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது குறித்தான சட்டத்தன்மையை மீளாய்வு செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சட்டமா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சட்டமா அதிபருக்கு கடிதமொன்றை இன்றையதினம் அனுப்பிவைத்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளார்.
தற்போது எல்லை நிர்ணய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இவ்வாறு எல்லை நிர்ணய செயற்பாடுகள் முடிவடைந்துள்ள மாவட்டங்களில் உள்ளூராட்சி மன்றத்தேர்தல்களை நடத்துவதற்கான சட்டத்தன்மையை மீளாய்வு செய்யுமாறு சட்டமா அதிபரிடம் தேர்தல்கள் ஆணையாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் எதிர்வரும் 2017 ஏப்ரல் மாதத்துக்குள் தேர்தலை நடத்த முடியும் என நம்பிக்கை வெளியிட்டாா்.
