இந்த மாதம் 15 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த முறை பாதீட்டில் வீதி போக்குவரத்து சட்டங்களை மீறுபவர்களுக்கான அபராதம் 2500 குறிப்பிடத்தக்களவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக கெமுனு விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஒன்றிணைந்த நேர அட்டவனை மற்றும் பேருந்துகளுக்கு வேறான தடம் பயன்பாடு போன்ற கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை நிர்வாக முடக்கல் போராட்டம் முன்னெடுக்கப்படும் என விஜேவர்தன குறிப்பிட்டுள்ளார்.
