கடந்த 30 வருடங்கள் சொந்த நாட்டுக்குக் கூட செல்லாத இந்தியா் கட்டார்-ஹிலால் பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற வாகன விபத்தில் பலியானார். ஆரம்பத்தில் இவா் யார் என்று அறியப்படாமல் இருந்து வந்த நிலையில் இவா் தொடா்பான தகவல்களை வழங்குமாறு கேட்கப்பட்டிருந்தது. பின்னார் அவரவு உறவினா்களுக்கு எத்தி வைக்கப்பட்டதாக செய்திகள்தெரிவிக்கின்றன.
மேற்படி பலியான நபா் இந்திய திருவாவூா் நாகப்பட்டினத்தை சேர்ந்த தாவூது சாஹிப் ஹாஜா மொய்தீன் அவர்கள் என்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அன்னாரின் ஜனாஸா இன்று11-11-2016 வெள்ளிக்கிழமை அஸர் தொழுகைக்கு பிறகு இன்ஷா அல்லாஹ் அபூஹமூர் பொது மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
1980களில் கட்டாருக்கு வந்த இவா்கள் கடந்து 30 வருடங்களாக தாயகத்திற்குச் சொல்லவில்லை. பல வருடங்களுக்கு முன்னா் இவரது மனைவியும், மகளும் உயிரிழந்து விட்டார்கள். இதன் காரணமாகத் தான் இவா்கள் கடந்த 30 வருடங்களாக நாட்டுக்குச் செல்லவில்லை என்பதாக அறிய முடிகின்றது.

