எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு அமுலில் இருக்கும் வகையில் தேசிய கட்டட ஆய்வு நிலையத்தால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி களுத்துறை, இரத்தினபுரி, மாத்தறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், மண்மேடுகள் சரிந்து விழுதல், பாரிய கற்கள் விழுதல் போன்ற சம்பவங்களும் நிகழக் கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்களை அவதானமாக இருக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
