Saturday, November 5, 2016

புத்தளம் தொகுதியின் தொடரும் மின்சார தடைப் பிரச்சினைக்குத் தீர்வு! அமைச்சர்கள் மட்டத்தில் முஸ்தீபு..!

புத்தளம் தொகுதியில்  தொடரும் மின்சாரத் தடை தொடர்பில் நமது அடுத்த முக்கிய  கட்டமாக மின்வலு மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவின் கவனத்திற்கு கொண்டு வர கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் ஊடாக மேற்கொண்ட பிரயத்தனம் அல்லாஹ்வின் அருளால் பயனளித்தள்ளது. الحمد لله 

நீண்ட காலமாக நமது தொகுதியில் தொடரும் மின்சாரத் தடை, 2013- 2016 காலப் பகுதியில் மே - ஒக்டோபர் வரை மாதத்துக்கு சராசரியாக 100 விடுத்தம் Trip விழுதல், இதன் மூலம் பொது மக்களின் மின்சார உபகரணங்கள் பெருவாரியாக பழுதடைந்தமை, மேலும் மக்கள், வர்த்தகர்கள், மாணவர்கள் அனுபவிக்கும் சொல்லொண்ணாத் துன்பங்கள், அரச அரச சார்பற்ற நிறுவனங்களின் இயல்பு நிலை பாதிக்கப்படல் உள்ளிட்ட  விடயங்களை தெளிவுபடுத்தனோம். மேலும் மின்சார வயர்களில் உப்பு படிவதே இதற்குக் காரணம் என மின்சார சபை தெரிவிப்பது முதலிய விடயங்களையும் சுட்டிக் காட்டினோம். 

இவற்றை எல்லாம் குறிப்பிட்டு இலங்கை மின்சார சபை பொது முகாமையாளரின் உடனடிக் கவனத்திற்கு கொண்டு வந்து, இதற்கு உரிய தீர்வை பெற்றுக் கொடுக்கும் படி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய பணிப்புரை விடுத்துள்ளார். மேலும் வடமேல் மாகாண இலங்கை மின்சார சபை பிரதி பொது முகாமையாளருக்கும் இதற்கு நடவடிக்கை எடுக்கும் படியும் அவர் பணித்துள்ளார். 

இரு அமைச்சர்களுக்கும் நமது நன்றிகள் உரித்தாகட்டும்.
الحمد لله. جزاهم الله خيرا

Disqus Comments