Sunday, November 13, 2016

மஹாவலி கங்கையிற்கு நீராடச் சென்ற உயா் தர மாணவா்கள் சடலமாக மீட்பு (வீடியோ இணைப்பு)

மஹாவலி கங்கையிற்கு நீராடச் சென்றுள்ள பாடசாலை மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

நேற்று(12-11-2016) பகல் நேரம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.


தெல்தெனிய - ஓருதொட பகுதியில் அவர்கள் நீராடச் சென்று, இவ்வாறு உயிரிழந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த இருவரும் மெனிக்கின்ன பிரதேசத்தில் உள்ள ரத்ணாயக்க மத்திய கல்லூரியில் 12 ஆம் தரத்தில் கல்வி பயின்று வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தனியார் வகுப்புக்கு செல்வதாக கூறி மேலும் 4 நண்பர்களுடன் நீராடச் சென்றுள்ளதாக தெல்தெனிய காவற்துறை தெரிவித்தது.

Disqus Comments