நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவு வரவு செலவுத்திட்டம் இன்று (1 சமா்ப்பிக்கப்பட்ட போது இலங்கை ஜனாதிபதி மைத்திரபால சிரிசேன அவா்கள் பாராளுமன்றத்துக்கு வருகை தந்தார்கள். மேற்படி வருகை தந்த அவா்கள் தனது மதிய உணவுக்காக மனைவி கையால் சமைத்து வீட்டிலிருந்து வாழை இலையில் சுற்றப்பட்டு கொண்டு வரப்பட்ட உணவை சாப்பிட்டார். அவா் சாப்பிடும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றது. இந்தக் காலத்தில் இப்படியும் ஒரு நாட்டுத் தலைவரா என்று அனைவரையும் இந்த விடயம் ஆச்சரியப்பட வைக்கின்றது.


