Tuesday, November 8, 2016

கட்டாரில் அல் சய்லிய்யா பாரிய தீ விபத்து. (படங்கள் இணைப்பு)

கட்டார் அல் சய்லிய்யா  பகுதியில் நேற்று மறுதினம் 2016/11/6 பாரிய தீ விபத்து ஒன்று ஏட்பட்டுள்ளதாக பெனிசுலா இணையத் தளச் செய்திகள் தெரிவிக்கின்றது. குறித்த பிரதேசத்தில் இருந்த பல வியாபார நிறுவனங்கள் இவ்விபத்தில் பாதிக்கப்பட்டுள்ளது.  இருந்த போதிலும் எந்த வித உயிராபத்துக்களும், காயங்களும் ஏற்பட வில்லை என்ன உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

தீயணைப்பு படையினரும் சிவில் பாதுகாப்பு படையினரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். பாதிக்கப்பட்ட உடைமைகள் தொடர்பாக அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு  கட்டார் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது .

இதுவரை தீ விபத்துக்கான காரணம் கண்டுபிடிக்கப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை  அந்நாட்டு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


Disqus Comments