Monday, November 7, 2016

ஆசிரியா்ப் பணி அறப்பணி! அதற்கு நீ உன்னை அா்ப்பணி! - ஆசிரியா்களுக்கான பதிவு.

உலகத்தில் முன்னேறிய பத்து பேருடன் பேட்டி  கண்டார்கள் "உங்களால் எவ்வாறு முன்னேற முடிந்தது என்பதாகும்". பத்தில் எட்டுப்பேர் தமது ஆசிரியர்களே தமது  Role Model  என்று கூறினர் என்றால் எவ்வளவு பெரிய பொறுப்பில் நீங்கள் இருக்கின்றீர்கள் என்பதை புரிந்துகொள்ளுங்கள். 

சோக்ரடீசின் மாணவன்பிளேட்டோ,  பிளேட்டோவின் மாணவன்அரிஸ்டோட்டில், அரிஸ்டோட்டிலின் மாணவன்  The Great Alexander உலகத்தை ஒருகுடையின் கீழ்  ஆள நினைத்து வெற்றியும் கண்டவன். அவனிடம் ஒருமுறை ஒருகேள்வி கேட்டார்கள் " உலகத்தயே ஜெய்க்க முடிந்த மனிதனாக உன்னால் எப்படி உருவாகமுடிந்தது" அவன் என்ன சொன்னான் தெரியுமா ?? " நான் உலகத்திற்கு வரக்காரணம் எனது தாய் தந்தை இந்த உலகம் என்னிடம் வரக்காரணம் எனது ஆசிரியர் அரிஸ்டோட்டில்"  என்றான்.

ஆகாயத்துக்கும் அப்பால் இருப்பவற்றையும்  அறிந்து வைத்துள்ளவர்கள் ஆசிரியர்கள் என்று பெற்றோர்கள் உங்களை அணுகுகின்றனர்.

ஒரு விளக்கானது தொடர்ந்து கொழுந்துவிட்டு  எரிந்தால் தான் மற்றொரு விளக்கை அதிலிருந்து ஏற்ற முடியும்  தான் தொடர்ந்து எரிவதற்கு இடையறாது எண்ணெய் ஊற்ற வேண்டும் அதேபோல ஒரு ஆசிரியர் தொடர்ந்து படித்தால்தான் சிறந்த மாணவரை உருவாக்க முடியும். 

கற்க தொடங்குபவன் மாணவன் கற்றுகொண்டே இருப்பவன் ஆசிரியன் அதனால்தான் ஆசிரியரை கற்று கொடுப்பவன் என்று  கூறினர். 

நிறைய பட்டங்கள் பெற்று தன்னுடைய பெயரை அலங்கரிப்பதை விட நல்ல புத்தகங்களை படித்து தனது மனத்தை அலங்கரிக்கும் ஆசிரியர்கள் மேன்மையானவர்கள்.

வகுப்பறைகளைத்தாண்டி கல்வியை நேசிக்க கற்றுக்கொள்ளுங்கள். பாடப்புத்தகங்களை தாண்டி கல்வியை நேசிக்ககற்று கொள்ளவேண்டும், பள்ளியிலுள்ள வகுப்பறை தாயினுடைய கருவறையை போன்றது.  பிள்ளைகள் வீட்டிலோ வைத்திய சாலைகளிலோ பிறக்கிறார்கள். ஆனால் வகுப்பறையிலேயே வளர்கிறார்கள்.

பேருக்கு ஆசிரியர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள் ஆனால் பேராசிரியர்களாக சிலரே இருக்கின்றனர். ஆசிரியர்களின்வாயில் இருந்துவரும் வார்த்தைகள் சத்தியத்தில் கருவாகி நெஞ்சத்தில்உருவாகி வருமானால்  கேற்கின்ற மாணவர்களின் இதயத்திலே வித்தாகவிழும். 

எப்போது முடிப்பார் என்பதை இன்னும் படிப்பிக்க மாட்டாரா என்று புலம்ப வைப்பவரே உண்மையான ஆசிரியர். 

எந்நேரமும் அக்கறையுடன் நம்பிக்கை ஊட்டலுடன் அன்புகலந்த கண்டிப்புடன் ஒரு ஆசிரியர் மாணவரை அணுகினால் அம்மாணவர்கள் ஒருக்காலும் தோற்றுப்போவதில்லை.. 

மதிப்பெண்களின் பின்னால் ஓடுகின்ற ஒரு கூட்டத்தை மட்டும் உருவாக்குவது ஆசிரியர்களின் அடிப்படை வேலை என்று தயவுசெய்து நினைத்து விடாதீர்கள்.

சிந்திக்க தெரிந்த தலைமுறையை உருவாக்க வேண்டும் இந்தநாட்டினிலே கல்விமுதுகிலே சுமக்கின்ற மூட்டையாக போய்விடாமல் இதயத்திலே சுமக்கும் இனிமையாக மாறவேண்டும்.

ஒரு  மாணவன்தவறுசெய்தால்  அது அவனது எதிர்காலத்தை பாதிக்கும் பெற்றோர் தவறு செய்தால் வீட்டின் எதிர்காலம் பாதிக்கும் ஆனால் ஆசிரியர்கள் தவறு செய்தால் நாட்டின் எதிர்காலம் பாதிக்கும். 

நன்றி
இணையம்.
Disqus Comments