Tuesday, November 15, 2016

நோட்டுக்கள் இன்றி அவதிப்படும் மக்களுக்கு கடனாக மருந்து வழங்கும் முஹம்மது இஸ்மாயீலின் மனிதபிமானம்!

அண்மையில் இந்தியா அரசாங்கத்தால் 500 மற்றும் 1000 ரூபா நோட்டுக்கு செல்லுபடியற்றதாக அறிவித்ததை அடுத்து இந்தியா முழுக்க அனைத்து விதமாக சிறிய வைக நோட்டுக்களுக்கு கூட தட்டுப்பாடு நிலவுவதை அவதானிக்க முடிகின்றது. அந்த வகையில் 500 மற்றும் 1000 ரூபா நோட்டுக்களை கொடுத்து பொருட்கள் வாங்க முடியாத நிலையில் நாடு முழுவதும் மக்கள் அங்கலாய்த்து வரும் மக்கள், தங்களது அன்றாட பொருட்களைக் கூட பெற்றுக் கொள்வதில் சிரமங்களை சந்தித்து வருகின்றனா். 

உயிா் காக்கும்  மருந்துப்பொருட்கள் வாங்க 100 ரூபா இல்லாதவா்கள் தனது பாமஸியில் கடனாக பெற்றுக் கொள்ள முடியும்,  பின்னா் அந்தக் கடனை செலுத்த முடியும் என்ற அறிவித்தல் பலகையை தனது மருந்துக்குடைக்கு முன்னால் விளம்பரப்படுத்தியுள்ளார் முஹம்மது இஸ்மாயீல் என்ற இஸ்லாமிய சகோதரா்.

குமரி மாவட்டம், தக்கலையில் முஹம்மது இஸ்மாயீல் என்ற இஸ்லாமிய சகோதரா் மருந்துக்கடை நடாத்தி வருகின்றார். மக்களது சிரமத்தை கருத்தில் கொண்டே இந்த மனிதபிமான நடவடிக்கை மேற்கொள்வதாக அறிவித்துள்ளார் முஹம்மது இஸ்மாயீல். பெரும் தொகையான மக்கள் இதன் மூலம் நன்மை அடைவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. 
மேலும் செய்திகளுக்கு வீடியோவைப் பாருங்கள்.

Disqus Comments