Thursday, November 17, 2016

சாய்ந்தமருதில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாபெரும் பொதுக்கூட்டம் ( வீடியோ )

(சாய்ந்தமருது முஹம்மட் றின்ஸாத்) "கல்முனைத் தொகுதியில், மண்ணெல்லாம் மாண்புறும் அபிவிருத்திகள்" நிகழ்வின் மாபெரும் பொதுக் கூட்டம் (14) சாய்ந்தமருது பெளசி கடற்கரை மைதானத்தில் ஆயிரக்கனக்கான போராளிகள் முன்னிலையில் இடம்பெற்றபோது.
இந்த நிகழ்வானது கல்முனை இறைவெளிக்கண்டம்(கிறீன்பீல்ட்) பிரதேச காணிகளில் மண் நிறப்பும் வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்தல், சாய்ந்தமருது வொலிவோரியன் பிரதேச காணிகளில் மண் நிறப்பும் வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்தல், சாய்ந்தமருது அஸ்ரப் ஞாபகார்த்த விளையாட்டு மைதானத்திற்கான பார்வையாளர் அரங்கு அமைப்பதற்கான அடிக்கல் நடுதல், சாய்ந்தமருது அஸ்ரப் ஞாபகார்த்த விளையாட்டு மைதானத்தின் சுற்றுமதில் அமைக்கும் வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்தல் என்ற பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டதன் பின்னர் இடம்பெற்றது.

இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் விழா நாயகனாக  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான சட்டமுதுமாணி  ரவூப் ஹக்கீம் கலந்து கொண்டு சிறப்பிப்பதோடு , ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவரும்,விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான  சட்டத்தரணி  எச்.எம்.எம்.ஹரிஸ் அவர்களும் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் , கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் அவர்கள் மற்றும் கல்முனை மாநகர சபையின் முன்னால் பிரதி முதல்வர்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூத்த துணைத் தலைவர் முழக்கம் ஏ.எல்.அப்துல் மஜீத் அவர்கள் இன்னும் கல்முனை மாநகர சபையின் முன்னால் பிரதி முதல்வர் ஏ,ஏ, பசீர் அவர்களும் மற்றும் பல மு.கா. அரசியல் பிரமுகர்களும் அதிதிகளும் கலந்து சிறப்பித்தனர்.







Disqus Comments