Tuesday, November 8, 2016

அமெரிக்க அதிபர் தேர்தல்: விண்வெளியிலிருந்தும் கூட தனது வாக்கைப் பதிவு விண்வெளி வீரர்

அமெரிக்க அதிபரைத் தேர்ந்தெடுக்க அந்நாட்டு மக்கள் வாக்களிக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் சார்பில் விண்வெளியில் தங்கி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் அமெரிக்க விண்வெளி வீரர் ஷேன் கிம்ப்ரோவும் ( Shane Kimbrough) தனது வாக்கினைப் பதிவு செய்துள்ளார்.
ஆனால், விண்வெளியில் இருந்து அவர் எவ்வாறு வாக்கினைப் பதிவு செய்தார் என்பது பற்றி நாசா தெரிவித்திருக்கவில்லை.
விண்வெளி ஆராய்ச்சிக்காக இரு ரஷ்ய விண்வெளி வீரர்களுடன் இணைந்து கடந்த ஒக்டோபர் 19 ஆம் திகதி கிம்ப்ரோ சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றார்.
நான்கு மாதங்கள் அவர் விண்வெளியில் தங்கியிருந்து ஆராய்ச்சி மேற்கொள்கின்றார்.
கடந்த 1997 ஆம் ஆண்டு விண்வெளி வீரர்கள் வாக்குப்பதிவு செய்யும் வகையில் அமெரிக்காவில் சட்டம் கொண்டுவரப்பட்டது.
டேவிட் வால்ஃப் என்ற விண்வெளி வீரரே முதல் முறையாக தனது வாக்கினை விண்வெளியில் இருந்து பதிவு செய்தார்.
Disqus Comments