Wednesday, November 9, 2016

டெல்லியிலிருந்து கட்டாருக்கு பறந்த JET AIRWAYS விமானத்தில் உடல்நல்குறைவால் பயணி ஒருவா் மரணம்!


நேற்று திங்கட்கிழமை பின்னிரவு இந்திய தலைநகர் புதுடெல்லியில் இருந்து தோஹா (கத்தார்) புறப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணித்த ஒருவர் திடீர் உடல்நலக் குறைவால் மரணமடைந்தார்.

141 பயணிகளுடன் புது டெல்லியில் இருந்து தோஹாவுக்கு பறந்து கொண்டிருந்த போது பயணிக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து அவசரமாக பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது எனினும் விமான நிலைய மருத்துவக் குழுவினர் பயணியை பரிசோதித்த பின் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், கராச்சி விமான நிலைய சம்பிரதாய கடமைகளுக்குப் பின் மரணமடைந்த பயணியின் உடலோடு ஜெட் ஏர்வேஸ் விமான மீண்டும் புதுடெல்லி திரும்புமென்றும், மற்ற பயணிகள் அனைவருக்கும் தங்குமிடமும் மாற்று விமான ஏற்பாடு செய்யப்படும் என்று அறிவித்துள்ளது. இறந்த பயணியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள விமான நிறுவனம் பயணி குறித்த எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்
Disqus Comments