Wednesday, November 9, 2016

இந்தியாவில் இன்று இரவு முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது! கறுப்புப் பணங்களுக்கு ஆப்பு!

புதுடெல்லி(08 நவ 2016): இன்று இரவு முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்த பிறகு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில். இன்று இரவு 12 மணி முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். கையில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் வைத்திருப்பவர்கள் டிசம்பர் 30-ம் தேதிக்குள் வங்கியில் மாற்றிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வருவோர் அடையாள அட்டை காட்ட வேண்டும், இதற்காக வங்கிகளில் சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்படும் என்று மோடி தெரிவித்தார். மேலும் நாளையும், நாளை மறுநாளும் ஏ.டி.எம். வேலை செய்யாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நவம்பர் 10 முதல் வங்கி மற்றும் தபால் நிலையங்களிலும் ஒப்படைக்கலாம் என்றும், வங்கிகள் ஏற்றுக் கொள்ளாத பணத்தை ரிசர்வ் வங்கியில் கொண்டு மாற்றி கொள்ளலாம் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

Disqus Comments