Monday, November 7, 2016

கர்ப்பிணி பெண்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் : தவற விடாதீர்கள்..!

பிரசவத்தின் போது தமக்கு விருப்பான பெண் ஒருவரை துணைக்கு அழைத்துக்கொள்ள கர்ப்பிணிகளுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என கொழும்பு காசல் மகப்பேற்று வைத்தியசாலையின் மகப்பேற்று நிபுணத்துவ மருத்துவர் பேராசிரியர் ஹேமந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
பிரவசத்தின்போது கர்ப்பிணிகள் தங்களது மனோ திடத்தை வலுப்படுத்திக்கொள்ள இந்த சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சந்தர்ப்பத்தை அனைத்து கர்ப்பிணிகளும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Disqus Comments