28,000 ஆசிரியர்களுக்கு டெப் (TAB) வழங்குவதாகவும், இதற்காக 5,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்குவதாகவும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
தெரிவு செய்யப்பட்ட 175,000 மாணவர்களுக்கு ஸ்மார்ட் கிளாஸ் எனப்படும் உயர்தரமான வகுப்பறை வசதிகளை வழங்குவதற்காக 6,500 மில்லியன் நிதி ஒதுக்குவதாகவும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதற்காக வைபை வழங்குவதற்கு தொலைத் தொடர்பாடல் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன் என்றும் அவர் கூறினார்.
அத்துடன் வருட இறுதிக்குள் நாட்டில் உள்ள 1000 பாடசாலைகளின் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்காக 3000 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பாடசாலைகளில் கல்வி வகுப்பறைகள் மற்றும் கட்டிடங்களை நிர்மானிப்பதற்க்கான 21,000 மில்லியன் ரூபா ஒதுக்குவதாகவும் கூறினார்.
