Wednesday, November 16, 2016

VIDEO CALL ON WHATS-APP - வீடியோ கோள் வசதியை அறிமுகம் செய்தது வாட்ஸ்அப்.


உலகில் வாழும் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பாவனையாளர்களால் விரும்பி உபயோகிக்கப்படும் வாட்ஸ்அப் பற்றியது தான் இன்றைய பதிவு.

அண்மைய நாட்களில் வாட்ஸ்அப் நிறுவனம் தனது பயனர்களுக்கு பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி வருவது நாம் அனைவரும் அறிந்த விடயமே. அவ்வாறு பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி வரும் வாட்ஸ்அப்-இல் வீடியோ அழைப்பு எடுக்கும் வசதி இல்லாதது ஒரு பெரும் குறையாகவே வாட்ஸ்அப் பாவனையாளர்களின் மத்தியில் காணப்பட்டது.. ஆகவே அந்த குறையை தீர்க்கும் முகமாக நேற்று வீடியோ கோள் வசதியை (15-11-2016) அறிமுகம் செய்துள்ளது. 

பாவனையாளா் தங்களது வாட்ஸ்அப் அப்ளிகேசனை அப்டேட் செய்வதன் மூலம் இந்த வசதியைப் பெற்றுக் கொள்ள முடியும் வாட்ஸ்அப் நிா்வாகம் அறிவித்துள்ளது.

Disqus Comments