Thursday, December 15, 2016

கட்டாரில் தங்கத்தின் விலைகள் சடுதியாக குறைந்தன. (15-12-2016) இன்றைய விலை விபரம்...

கட்டாரில் கடந்த 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு தங்கத்தின் விலைகள் குறைந்துள்ளன.  எதிா்வரும் காலங்களில் விலைகள் குறைவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக கட்டார்  செய்ததிகள் தெரிவிக்கின்றன.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் 24கரட் தங்கம் 165 றியால்களுக்கு விற்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது 24 கரட் தங்கம் 141 றியால்களாக சரிவைக் கண்டுள்ளது.

அது போல 22 கரட் தங்கம் 155 றியால்களுக்கு விற்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அதனது விலை 131றியால்கள் வரை வீழ்ச்சி கண்டுள்ளது. 

தங்கம் மட்டு மல்லாது வெள்ளியின் விலையும் சரிவைக் கண்டுள்ளதாக கட்டார் செய்திகள் தெரிவிக்கின்றன.
Disqus Comments