கட்டாரில்
தொழிலாளா் நல சட்டங்கள் ( Law No. 21 of 2015)13ம் திகதியான இன்று
முதல் அமூலாக்கம்
செய்யப்பட இருப்பதாக கட்டார் உத்தியோக பூா்வ அரசாங்கம் அறிவித்துள்ளது.
புதிய
சட்ட திருத்தம் தற்போது அமூலில் உள்ள “Kafala system” இல்லாமல் ஆக்கி கட்டாரில் உள்ள 2.1 மில்லியன்
தொழிலாளா்களுக்கும் சுதந்திரத்தையும், பாதுகாப்பையும் வழங்கும் என்பதாக ஊடகவியலாளா் மாநாட்டில்
Minister of Administrative Development
Labour and Social Affairs Dr. Issa bin Saad Al Jafali Al Nuaimi அவா்கள் அறிவித்துள்ளார்.
மேற்படி
புதிய சட்ட திருத்தங்கள் தொடா்பாக கருத்து தெரிவிக்கும்
போது,
எமது
கட்டார் நாடு கட்டாரின் வளா்ச்சிப் பணிகளில் தங்களை அா்ப்பணித்துள்ள வெளிநாட்டு
தொழிலாளா்களுக்கு நன்றி தெரிவித்தார். அத்துடன் புதிய திருத்தங்கள் கட்டாரில் பணிபுரியும் அனைவரினதும் பாதுகாப்பையும்
மற்றும் உரிமைகளையும் உறுதிப்படுத்தும் என்றார்.
பழைய
“Kafala system” இல்லாமல்
செய்யப்பட்டு புதிய ”contract-based
system” அறிமுகம் செய்யப்பட்டுள்ளமையானது பணியாளா்களின் உரிமை வழங்குவதோடு வேலை நெகிழ்வுத் தண்மையையும் வழங்குகின்றது. புதிய
சட்டங்கள் தொடா்பான கருத்துக்களையும், ஆக்க பூா்வமான விமா்சனங்களையும் வரவேற்கின்றோம்
, அப்படி நீங்கள் வழங்கினால் எதிர் காலத்தில் பிரயோசனம் அளிக்கும் என்றார்.
மேற்படி
புதிய சட்ட திட்டங்கள் சரியான முறையில் அமூலாக்கப் செய்யப்படுகின்றன என்ற விடயத்தில் கட்டார் அரசாங்கள் கூடிய கவனத்தை செலுத்தும் என்பதாகவும் அதற்காக compliance inspectors”
அதிகாரிகளை” வேலைக்கு
அமா்தவுள்ளதாகவும் brigadier Mohammed Ahmed Al Atiq Director
General of the Department of Passport
and Expatriates Affairs in the Ministry of Interior அவா்கள் தெரிவித்தார்.
மேலும்
அவா் கருத்து தெரிவிக்கும் போது,
புதிய
சட்டத்திருத்தம் Law
No. 21 of 2015 விடயத்தில் அரசாங்கள்
அதிக முன்னுரிமைகளை வழங்கிச்
செயற்படும். இது
தொடா்பான கண்காணிப்புக்கள் எதிர்வரும் வாரங்களில் ஆரம்பிக்கப்பட இருக்கின்றது.
பின்னா் அந்நடவடிக்கைகள் தொடரும்.
புதிய
சட்ட திருத்தத்தில் வெளிநாட்டவா்கள் வருடாந்த
விடுமுறை அல்லது அவசர
நிலைமைகளில் employerக்கு அறிவித்து விட்டு கட்டாரை விட்டு வெளியேற உரிமையைக் கொண்டுள்ளனா்.
அத்துடன்
பணியாளா்கள் ஒப்பந்தங்களை முடிக்காமல் அல்லது முடித்துவிட்டு employer க்கு அறிவித்து (according to the terms of the contract) விட்டு கட்டாரை
விட்டு நிரந்தரமாக செல்லவும் உரிமைகளைக் கொண்டுள்ளனா். இது போன்ற சந்தா்ப்பங்களில் employer விடுமுறை மறுக்கின்ற
போது தொழிலாளா்கள்
”Exit Permit Grievances Committee” மேல்
முறையீடு செய்ய முடியும். மேற்படி கமிட்டி அனைத்து விதமான முறையீடுகளுக்கும் 3 நாட்களுக்குள் பதில்களை வழங்கும். முக்கியமான விடயம் இதுபோன்ற சந்தர்ப்பங்ளில் மேற்படி வெளிநாட்டவா்கள் எந்தவிடமான குற்றச் செயல்களுடன் தொடா்புபடாதவராகவும், கடன் இல்லாத வராகவும் இருக்க வேண்டும் என்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டு
பணியாளா்கள், கம்பனிகளுக்கிடையில் மாற விரும்வினால் ஒப்பந்தக்தக்
காலத்தை நிறைவு செய்திருந்தால் மட்டும் போதும், employer யிடம் அனுமதி பெறத் தேவையில் என்பதாக அறிவித்தார். open-ended contracts(Unlimited) ஒப்பந்தத்தில் கைச் சாத்திட்டவா்கள், ஐந்து வருடங்களின் பின்னா் தான் employerகளை மாற்றிக் கொள்ள முடியும் என்றார்.
அனைத்து
பணியாளா்களும் ஒப்பந்தத்தின் ஒரு பிரதி வழங்கப்பட வேண்டும் என்றும் நாடு
செல்லும் பணியாளா்கள், அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை பெற்றிருக்க
வேண்டும் என்பதாக அறிவிக்கப்பட்பட்டுள்ளது.
தொழிலாளா்களின்
கடவுச்சீட்டுக்களை வைத்திருக்கும் Employerகருக்கும் 25000 கட்டார் றியால்கள் அபராதம்
விதிக்கப்படும் என்பதாகவும் அறிவித்தார்.
