Monday, January 30, 2017

சாய்ந்தமருதில் சோகம் - உம்ராவிலிருந்து திரும்பியவர்கள் விபத்தில் சிக்கினர், 3 பலி, பலர் காயம்

(*-எம்.வை.அமீர்-* MN)இன்று அதிகாலையில் 5.30 மணியளவில் சாய்ந்தமருதில் இடம்பெற்ற விபத்தின்போது மூவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் ஒருவர் தனது கைகளில் ஒன்றை இழந்துள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாய்ந்தமருது பிரதான வீதி அஸ்லாம் பிக் மார்ட் முன்பாக இடம்பெற்ற குறித்த விபத்தில் உம்ரா கடமையை நிறைவேற்றிவிட்டு வீடுதிரும்பிக் கொண்டிருந்த பாலமுனையைச் சேர்ந்தவர்களே மரணம் மற்றும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும் மட்டக்களப்பு நோக்கிச்சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியதாலேயே சம்பவம் இடம்பெற்றிருக்கலாம்

என்றும் சம்பவத்தின்போது பத்துக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் சம்பவ இட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.



Disqus Comments