ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை நிறுவனத்தின் ஊழியர்கள் முட்கம்பிகளுக்குள் சிக்கிக் கொண்ட சம்பவம் தமிழ்நாட்டில் பதிவாகியுள்ளது.
மதுரையிலிருந்து கொழும்பு நோக்கி செல்ல தயாராக இருந்த விமானத்தை நோக்கி அதன் செயற்பாட்டு குழுவினர் சென்றுள்ளனர். இதன்போது தடுப்புக்காக போடப்பட்டிருந்த முட்கம்பி வேலிக்கு கீழாக ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
விமானத்தின் பிரதான விமானி கெப்டன் ஆர்.டி அல்விஸ், விமான உதவியாளர்கள், பணிப்பெண்கள் என அனைவரும் இவ்வாறு ஊர்ந்து சென்றுள்ளனர்.
மதுரை முக்கிய விமான நிலையத்தின் நுழைவில் அனுமதி பெறுவதற்கு கடும் சிரமங்களை எதிர் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
மதுரை விமான நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற போராட்டம் காரணமாக மதுரை விமான நிலையத்திற்கு அருகில் வீதி மூடப்பட்டமையே இந்த நிலைமைக்கு காரணமாகியுள்ளது.
விமான குழுவினர் விடுதியில் இருந்த நிலையில் மதுரையில் இடம்பெற்ற போராட்டம் நிறைவடைந்த நிலையில் அனைத்து ஊழியர்களின் கருத்தை கேட்டுக் கொண்டு தங்கள் விமானத்தை இயக்குவதற்கு விமான கெப்டன் அல்விஸ் தீர்மானித்துள்ளார்.
இதன் போது இவர்கள் விமான நிலையத்தின் எல்லையை சென்றடைவதற்கு அழுக்கு சாலை ஒன்றின் ஊடாக அழைத்து சென்று முட்கம்பி வேலி மூலம் ஊர்ந்து அனுப்பி வைக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
வீடியோ உதவி : Colombo telegraph
