Wednesday, January 25, 2017

உயா் தரப் பெறுபேற்றில் குருநாகல் வெல்பொதுவெவ அல் இல்மியா முஸ்லிம் மகாவித்தியாலயம் சாதனை

குருநாகல் மாவட்டத்தில் நிக்கவெரட்டிய கல்வி வலயத்தில் கொபேகன கல்வி கோட்டத்தில் வெல்பொதுவெவ என்னும் அழகிய  கிராமத்தில் அறிவொளி வீசும் அழகிய கலைக்கூடமே அல் இல்மியா முஸ்லிம் மகாவித்தியாலயம் ஆகும். இப் பிரதேசத்தில் மட்டுமன்றி மாவட்ட, மாகாண எல்லைகளைத்தாண்டி மாணவச் செல்வங்களின் அறிவுப் பசியை தீர்க்கும் முகமாக கல்வி எனும் அமுதூட்டிக்கொண்டிருக்கின்றது இக் கலைக்கூடம்.
இப் பாடசாலையானது இம்முறை வெளியான க.பொ.த உயர்தர பெறுபேறுகளின் பிரகாரம் 13 3A சித்திகளுடன் மிகச்சிறப்பான பெறுபேற்றை பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளமை குறிப்பிட பட வேண்டிய விடயமாகும்.
அது மற்றும் அல்லாமல்  க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் படி கலை மற்றும் வணிக துறைகளில் அகில இலங்கை ரீதியில் 11 வது இடத்தையும் தமிழ் மொழி மூலமான பாடசாலைகளில் முதலாவது இடத்தையும் பெற்றுள்ளது.
அதிபர் மற்றும் ஆசிரியர்களின் அயராத உழைப்பும் மாணவர்களின் கடின முயற்சியுமே இவ்வாறான ஒரு பெறுபேற்றை பெற்றுக்கொள்ள முடிந்தது என பாடசாலை பழைய மாணவர்கள் தெரிவித்தனர்.
இவ் வெற்றியை பெற்றுக்கொள்ள உறுதுணையாக இருந்த அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், நலன்விரும்பிகள், பழைய மாணவர்கள், மற்றும் ஊர் மக்கள் அனைவருக்கும் பழைய மாணவர்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்தனர்.
முஸ்லிம்களுக்கு பெறுமை சேர்த்து முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் வெல்பொதுவெவ அல்-இல்மியா முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு மேலும் மேலும் பல சிறப்பான வெற்றிகளை பெற தளம் நியூஸ் சார்பாக வாழ்த்துகிறோம்.
தகவல்
மொஹம்மத் அர்சாத்

Disqus Comments