Wednesday, January 25, 2017

குவைத் இளவரசர் உட்பட 7 பேருக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றம்!


குவைத் இளவரசர்களில் ஒருவரான ஷேக் பைசல் அல் அப்துல்லாஹ் அல் சபா தனது உறவினரான இளவரசர் ஷேக் பாஸில் சாலிம் சபா அல் சாலிம் அல் சபா என்பவரை 2010 ஆம் ஆண்டு சுட்டுக்கொன்ற வழக்கில் 2013 ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மேல்முறையீடுகளுக்குப் பின் இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.


இளவரசர் ஷேக் பைசலுடன் சேர்த்து கொலை மற்றும் போதை பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டது போன்ற வெவ்வேறு குற்றங்களில் தொடர்புடைய மொத்தம் 7 பேர் இன்று தூக்கிலிடப்படவுள்ளனர். இவர்களில் 3 பேர் தலா ஒருவர் என குவைத், எத்தியோப்பியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெண்கள் மற்ற 3 பேர் ஆண்கள், இவர்களில் 2 பேர் எகிப்தியர் ஒருவர் பங்களாதேஷ் நாட்டவர்.



இதில் குவைத் பெண்ணான நஜ்ரா அல் எனீஸி என்பவர் 2009 ஆம் ஆண்டு தனது கணவரின் இரண்டாவது திருமணம் நடைபெறவிருந்த கூடாரத்தை திட்டமிட்டு எரித்ததன் மூலம் பெண்கள், குழந்தைகள் என 57 பேரின் மரணத்திற்கு காரணமானதால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்.



Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
Disqus Comments